Publish Date: Wed, 06 Aug 2008 (16:24 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)
இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் மோதலில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். படைத் தரப்பைச் சேர்ந்தவரின் உடல், விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று புதினம் இணைய தளம் கூறுகிறது.
இதேபோல, பாலமோட்டையில் நேற்று முன்தினம் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.