அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஓபாமாவுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கெய்னும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலில் ஒபாமாவை ஆதரித்து, நெவாடா என்னுமிடத்தில் ஹிலாரி இந்த வாரம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அப்போது ஒபாமாவுக்கு ஆதரவு கேட்டு விரிவான அளவில் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 21ஆம் தேதி புளோரிடாவிலும் ஹிலாரி பிரச்சாரம் செய்கிறார்.
ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சி சார்பில் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டிக்கான தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்டார். இப்போட்டியில் ஹிலாரியை தோற்கடித்து ஒபாமா வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.