Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்.பி.டி., சி.டி.பி.டி-யில் இந்தியா கையெழுத்திட வேண்டும்: ஜப்பான்!

என்.பி.டி., சி.டி.பி.டி-யில் இந்தியா கையெழுத்திட வேண்டும்: ஜப்பான்!
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை (Non Proliferation Treaty -NPT), விரிவான அணு ஆயுத சோதனை தடை உடன்பாடு (Comprehensive Test Ban Treaty -CTBT) ஆகியவற்றில் இந்தியா கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவின் எரிசக்தி தேவையை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால், உலகளவிலான அணு ஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக என்.பி.டி., சி.டி.பி.டி.-யில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்துவதாக ‌புதுடெல்லி வந்துள்ள ஜப்பான் அயலுறவு அமைச்சர் மாஷிகோ கௌமுரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் (NSG) இடம்பெற்றுள்ள ஜப்பான், 2ஆம் உலகப் போரில் அணு ஆயுத தாக்குதலில் சிக்கி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்பதால், உலகம் முழுவதும் அணு ஆயுதப் பரவலை தடுக்க தீவிரவமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

வியன்னாவில் வரும் 21ஆம் தேதி துவங்கும் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என ஜப்பான் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், என்.பி.டி., சி.டி.பி.டி.-யில் இந்தியா கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என இன்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil