Newsworld News International 0808 05 1080805041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமென் படுகாயம்!

Advertiesment
மிஸிசிப்பி மார்கன் ஃப்ரீமென்
பிரபல ஹாலிவுட் நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான மார்கன் ஃப்ரீமென், மிஸிசிப்பி அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

விபத்துப் பகுதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர், ஹெலிகாப்டர் உதவியுடன் டென்னிஸி பகுதியில் உள்ள மெம்பிஸ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிசிஸிப்பி அருகே டல்லாஹட்சி கிராமப்பகுதியில் ஃப்ரீமென் சென்று கொண்டிருந்த கார், மற்றொரு வாகனத்தின் மீது மோதி பலமுறை சாலையில் உருண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஃப்ரீமெனுடன் காரில் பயணித்த மற்றொரு பெண்மணியும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

71 வயதாகும் ஃப்ரீமென், கடந்த 1989இல் வெளியான ‘டிரைவிங் மிஸ் டெய்ஸி’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். சமீபத்தில் வெளியான பேட்மென் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil