காஸா- எகிப்து எல்லையில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
காஸா எல்லைக்கு அருகில் ராஃபா நகரில் இருந்த கள்ளக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்ததாக பாலஸ்தீன பாதுகாப்பு, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள காஸா பகுதிக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதை வழியாக ஆயுதங்கள், பணங்கள் கடத்தப்பட்டு வருகிறது.