இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த கடுமையான மோதலில் சிறிலங்கப் படையினர் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனிக்குளத்தில் உள்ள பாலையடியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வு நடவடிக்கையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலின் மூலம் முறியடித்து உள்ளதாகவும், இதில், 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
முல்லைத்தீவு மேற்கு வவுனிக்குளத்தில் உள்ள பாலையடியில் இருந்து மும்முனைகளில் நேற்று காலை 6:00 மணியளவில் படையினர் எம்.ஜ-24 ஹெலிகாப்டரின் பீரங்கித் தாக்குதலுடனும் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மல்லாவியை கைப்பற்றும் நோக்கில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
இரவு 7.00 மணி வரை இருதரப்பிற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.