Publish Date: Thu, 31 Jul 2008 (13:42 IST)
Updated Date: Thu, 31 Jul 2008 (13:42 IST)
இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் பலியான சிறிலங்கப் படையினரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பாலமோட்டை பகுதியில் நேற்றுக் காலை 10.30 மணியளவல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
படையினரின் இந்த முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தியுள்ளனர். இரு தரப்பிற்கும் இடையில் மாலை 6.00 மணி வரை கடும் மோதல் நடந்துள்ளது.
இந்த மோதலில் பலியான படையினரின் எண்ணிக்கை 12 ஆகவும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 16 ஆகவும் உயர்ந்துள்ளது என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
Webdunia
Publish Date: Thu, 31 Jul 2008 (13:42 IST)
Updated Date: Thu, 31 Jul 2008 (13:42 IST)