Publish Date: Wed, 30 Jul 2008 (20:32 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (20:31 IST)
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிறிலங்கப் படைத் தரப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் தெற்குப் பகுதியில் நேற்று நடந்த மோதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
கல்விளான் தெற்குப் பகுதி, வவுனிக்குளம், மன்னார் இலுப்பைக்கடவை பகுதிகளில் நடந்த மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா கல்மடு, மணலாறு கிரிபன்வேவ பகுதிகளில் நடந்த மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.