Publish Date: Wed, 30 Jul 2008 (20:04 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (20:03 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில் படையினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வன்னி மாவட்டம் பாலமோட்டையில் விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது இன்று காலை 10.30 மணி முதல் சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
படையினரின் இந்த முன்நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் நடந்து வரும் கடும் மோதலில் இதுவரை 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 படையினர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.