முகமது ஹனீஃப் ஆஸ்ட்ரேலியாவிற்கு எந்த அச்சுறுத்தலையும் தரவில்லை, அவர்மீது தவறாக பயங்கரவாத குற்றச்சாற்றுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று ஆஸ்ட்ரேலிய உளவு நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ஆஸ்ட்ரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, முகமது ஹனீஃப் தேசப் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலையும் தரவில்லை என்று கூறியுள்ளது.
பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் திட்டத்துடன் முகமது ஹனீஃப் தொடர்புபடுத்தப்பட்டது எப்படி என்றும், அவருக்கு எதிராகக் குற்றச்சாற்றுக்கள் திருப்பப்பட்டது எப்படி என்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் கிளார்க் தற்சமயம் விசாரித்து வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீஃப், ஆஸ்ட்ரேலியாவில் பயங்கரவாத திட்டத்திற்கு துணை புரிந்ததாகக் குற்றம்சாற்றப்பட்டு உள்ளார். மேற்படி குற்றச்சாற்றுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஹனீஃப் வாதாடி வருகிறார்.