ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், தரையில் இருந்து விண்ணை நோக்கி பாய்ந்து சென்று இலக்கை குறிப்பார்த்து தாக்கும் வல்லமை உடைய ஏவுகணை சோதனையை ஜப்பான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அண்டை நாடான வடகொரியாவிடமிருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் தனது பாதுகாப்பு திறனை அதிகரித்துக் கொள்வதற்காக இந்த ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது.
பிஏசி-3 பேட்ரியாட் என்னும் தரையில் இருந்து விண்ணை நோக்கி பாய்ந்து சென்று இலக்கை குறிப்பார்த்து தாக்கும் வல்லமை உடைய இந்த ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.
எதிரி நாட்டில் இருந்து ஜப்பானை தாக்கும் நோக்கத்தில் செலுத்தப்படும் ஏவுகணையை தடுக்க அமெரிக்க, ஜப்பான் பாதுகாப்பு படையினர் தடுக்க தவறும் பட்சத்தில், இந்த தரையில் இருந்து விண்ணை நோக்கி பாய்ந்து சென்று தாக்கும் திறனுடைய பிஏசி-3 பேட்ரியாட் ஏவுகணை பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு வடகொரியா ஏவுகணை, அணுகுண்டு சோதனை நடத்தியதையடுத்து, அச்சுறுத்தல் அதிகரித்து வருவதன் காரணமாக ஜப்பான், அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம் தனது ஏவுகணை பாதுகாப்பு திறனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.