Publish Date: Mon, 28 Jul 2008 (17:39 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (17:36 IST)
அல்-கய்டா தீவிரவாதிகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் பாகிஸ்தான் பகுதியில் இன்று நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையின், தெற்கு வசிரிஸ்தான் பழங்குயினர் பகுதியில் உள்ள அஜம் வர்சாக் கிராமம் அருகே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசிரிஸ்தான் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடந்ததை பாகிஸ்தானின் ராணுவ செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். எனினும் இது குறித்து விரிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றார். மேலும் வானா பகுதியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரத்தை கொடுத்துள்ளனர்.