Newsworld News International 0807 26 1080726055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரு குண்டுவெடிப்பு: வங்கதேசம் கண்டனம்!

Advertiesment
பெங்களூரு இப்திகார் அகமது சௌத்ரி
, சனி, 26 ஜூலை 2008 (17:50 IST)
பெங்களூருவில் நேற்று நடந்த தொடரகுண்டுவெடிப்புக்கு வங்கதேச அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு இடைக்கால அரசின் அயலுறவு ஆலோசகர் இப்திகார் அகமது சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு குண்டுவெடிப்புக்கு வங்கதேச மக்க‌ள் கடு‌ம் கண்டனம் தெரிவிப்பதாகவும், இதுபோன்ற கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதல்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இப்திகார் அகமது அதில் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவின் பல்வேறு இடங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil