Publish Date: Fri, 25 Jul 2008 (14:54 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (14:54 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் படையினர் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறிலங்கப் படையினர் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் என்று புதினம் இணைய தளம் கூறுகிறது.
இந்த மோதலில் நேற்று 9 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், நவ்விப் பகுதியில் இன்று நடந்த மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் மிதிவெடி மற்றும் பொறிவெடிகளிலும் படையினர் சிக்கியுள்னர். இதில் ஏற்பட்ட இழப்பு விவரங்கள் இதுவரை கிடைவில்லை என்றும் அச்செய்தி கூறுகிறது.