Newsworld News International 0807 23 1080723033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணுசக்தி ஒப்பந்தம் தேர்தலுக்கு முன் நிறைவேற்றம்: அமெரிக்கா!

Advertiesment
அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் பன்னாட்டு அணுசக்தி முகமை IAEA NSG Nuclear Suppliers’ Group டானா பெரினோ புஷ் மன்மோகன் சிங்
, புதன், 23 ஜூலை 2008 (13:25 IST)
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த முடியும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்காக பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) மற்றும் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் (Nuclear Suppliers’ Group - NSG) ஒப்புதல் பெறும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடும் என வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் டானா பெரினோ தெரிவித்துள்ளார்.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த டானா பெரினோ, விரைவில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் துவங்கும் என்பதால், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஜி-8 மாநாட்டில் பங்கேற்ற அதிபர் புஷ், பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றம் குறித்து விவாதித்ததை டானா பெரினோ பேட்டியின் போது உறுதி செய்தார்.

இதற்கிடையில், பன்னாட்டு அணுசக்தி முகமை மற்றும் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததிற்கு ஒப்புதல் பெற புஷ் அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil