பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்காவுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. தீவிரவாதத்தை ஒழிக்க நிர்ப்பந்திப்பது மட்டுமே இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அரசு உடன் தொடர்பு கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இருப்பதாக நினைக்கவில்லை. யார் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது ஒரு விஷயமே இல்லை.
நாங்கள் அந்நாட்டு பிரதமர் உள்பட அதிபர் பர்வேஷ் முஷாரப், அரசு உயர் அதிகாரிகள் உடன் தொடர்ந்து தொடரபு கொண்டு வருகிறோம் என்று அமெரிக்க செய்திதொடர்பாளர் சீன் மெக்கோர்மக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் எங்களுக்கு ரொம்ப நல்ல உறவு உள்ளது. இது விரிவான, ஆழமான உறவு. இந்த உறவை மேலும் அதிகரிக்கவும், ஆழப்படுத்தவும் நாங்கள் விழைகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.