Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

57 நிமிடத்தில் ஆயிரம் கையெழுத்து: ருஷ்டி சாதனை!

57 நிமிடத்தில் ஆயிரம் கையெழுத்து: ருஷ்டி சாதனை!
, சனி, 19 ஜூலை 2008 (12:03 IST)
இந்திய வம்சாவ‌‌‌ழியைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 57 நிமிடத்தில் ஆயிரம் புத்தகங்களில் கையெழுத்திட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த வாரம் ‘பெஸ்ட் ஆஃப் புக்கர்ஸ’ விருது பெற்ற சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நாஷ்வில்லி பகுதியில் உள்ள புத்தகக் கடையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

ருஷ்டியிடம் நேரில் புத்தகத்தை வாங்க ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் புத்தகக் கடையில் குவிந்தனர்.

இதையடுத்து புத்தகங்களில் கையெழுத்திட்டு ரசிகர்களுக்கு வழங்கிய ருஷ்டி, 57 நிமிடங்களில் ஆயிரம் புத்தகங்களில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பாக எழுத்தாளர் மால்கம் குலுக்ஸ், 59 நிமிடத்தில் 1,001 புத்தகங்களில் கையெழுத்திட்டதே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil