நெடுந்தொலைவு சென்று இலக்கை குறிப்பார்த்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
அலாஸ்காவில் உள்ள கோடியாக் தீவிலிருந்து கிரீன்விச் நேரப்படி நேற்றிரவு 10.47 மணிக்கு ( இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணி) இலக்கைச் சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள பியேல் விமானப்படைத் தளத்தில் இருந்து ராடார் மூலம் இந்த ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் உள்ள ராடார்கள், ஏவுகணை பாதுகாப்பு முறையில் உள்ள சென்சார் கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் பென்டகன் கூறியுள்ளது.