Newsworld News International 0807 19 1080719008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி!

Advertiesment
நேபாள‌ம் பேருந்து விபத்து கரேகோலா
, சனி, 19 ஜூலை 2008 (11:07 IST)
நேபாளத்தின் மத்திய பகுதியில் உள்ள மலைப்பாதையில் சென்ற பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கரேகோலா பகுதியில் பாயும் திரிசுலி ஆற்றில் இன்று அதிகாலை பேருந்து கவிழ்ந்ததாகவும், அப்போது அதில் 50க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவ‌ர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விபத்துப் பகுதியில் இருந்து 12 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், ஆற்றில் கவிழ்ந்த பேருந்துக்குள் இன்னும் சில உடல்கள் இருப்பதாக நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இவ்விபத்தில் 26 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil