இங்கிலாந்தில் உள்ள அதிகப்படியான பள்ளி மாணவர்கள், ஒரு வாரத்துக்கு 6 பைன்ட் (ஒரு கலனில் 1/8 பங்கு) மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 6,40,000 பள்ளி மாணவர்களில், 11 வயது முதல் 15 வயது வரையுள்ள 5 மாணவர்களில் ஒருவர் கடந்த வாரம் மது அருந்தியுள்ளதாக அந்நாட்டின் தேசிய மருத்துவ சேவை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு வாரத்துக்கு 12.7 யூனிட் மதுவை, பருவ வயதையடைந்த மாணவர்கள் அருந்தியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்த தகவலில், நான்கில் ஒரு பங்கு சிறுவர்கள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது போதை பொருள் பயன்படுத்தி இருப்பதும், மூன்று பேரில் ஒருவர் புகைப் பழக்கம் உடையவராக இருப்பதும் மேலும் தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் சிறு வயதிலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையாவது பிற்காலத்தில் அவர்கள் உடல்நலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.