Publish Date: Thu, 17 Jul 2008 (17:57 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
இங்கிலாந்தில் அந்நாட்டுக்குச் சொந்தமான ராணுவ வாகனத்தில் மறைந்து முறைகேடாக அந்நாட்டுக்குள் நுழைந்த இந்தியாவைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேலைஸ் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறி 24, 26 வயதுடைய அந்த இரண்டு இந்தியர்களும் மறைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோஸோவோ என்ற பகுதியில் இருந்து குளோவ்செஸ்டர்சைர் என்ற ராணுவ வீரர்கள் வசிக்கும் இடத்துக்கு மூன்று ராணுவ வாகனம் திரும்பி வந்தது. அப்போது அதில் ஒரு வாகனத்தில் இருந்து 3 பேர் குதித்து வெளியேறினர்.
பின்னர் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அதில் இரண்டு பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது.