Newsworld News International 0807 17 1080717039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எகிப்து: ரயில் விபத்தில் 40 பேர் பலி!

Advertiesment
எகிப்து ரயில்வே கெய்ரோ விபத்து
, வியாழன், 17 ஜூலை 2008 (13:35 IST)
எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் கார்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இரு‌ந்து 430 கி.மீ தொலைவில் உள்ள மர்ஷா மட்ரோவா என்ற பகுதிக்கு அருகே உள்ள ரயில்வே கிராஸிங்கில் இந்த விபத்து நேற்று நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே கிராஸிங்கில் காத்திருந்த கார்களின் மீது அந்த சாலையில் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகவும், இதில் 3 கார்கள் ரயில் தண்டவாளத்தின் மீது தள்ளப்பட்டதாகவும் ‌நிக‌ழ்வை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

அச்சமயத்தில் பயணிகள் ரயிலும் அவ்வழியாக வந்ததால், கார்கள் மீது ரயில் மோதியது. இதில் அப்பகுதியிலேயே 35 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 50க்கும் அதிகமானோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil