Publish Date: Wed, 16 Jul 2008 (18:26 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
இலங்கை வவுனியாவில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலமோட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது நேற்று சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படையினரின் முன்நகர்வு முயற்சியைத் தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகளும் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையில் நேற்றிரவு வரை நீடித்த இந்தக் கடும் மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன், 19 படையினர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளம் கூறுகிறது.