Publish Date: Wed, 16 Jul 2008 (11:53 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
மேற்கு ஸ்வீடனில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென அறுந்து விழுந்ததில் அதில் இருந்த 30 பேர் படுகாயமடைந்தனர்.
கோட்டெபோர்க் என்னுமிடத்தில் உள்ள லீஸ்பெர்க் என்னும் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ஒரு ராட்டினத்தில் பலர் ஏறியிருந்தனர். ராட்டினம் வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தபோது அதன் இருக்கை பகுதி திடீரென ஒரு பக்கமாக சரியத்தொடங்கியது. இதனால் அந்த ராட்டினத்தில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.
இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.