Publish Date: Wed, 16 Jul 2008 (11:28 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு தற்கொலைப்படையினர் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் புகுந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் தேர்வுக்கு வந்திருந்த 28 பேர் பலியாயினர்.
பகுபா என்னுமிடத்தில் உள்ள சாத் இராணுவ முகாமில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் ஈராக் நேரப்படி காலை 8 மணிக்கு நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தாக்குதலை உறுதி செய்துள்ளது.
ஈராக்கில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 பேரும், ஜுன் 22ஆம் தேதி பெண் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 15 பேரும் பலியாயினர். கடந்த 4 மாதங்களில் நடத்தப்பட்ட 3-வது தற்கொலை தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.