Publish Date: Wed, 16 Jul 2008 (10:19 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
கிரீஸ் நாட்டின் தீவுப்பகுதியான ரோடஸில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்த அந்த பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு அலறி அடித்து ஓடியபோது, ஒரு பெண் மட்டும் வீட்டை விட்டு வெளியேறிய போது கால் வழுக்கி விழுந்ததில் உயிரிழந்தார்.
மற்றபடி பெரிய அளவில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏதேன்ஸில் இருந்து 275 மைல் தொலைவில் தென்கிழக்காக இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.