Publish Date: Tue, 15 Jul 2008 (18:50 IST)
Updated Date: Tue, 15 Jul 2008 (18:50 IST)
இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் பாலமோட்டை, குஞ்சுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்கப் படையினர் நேற்று முற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படையினர் இந்த முன்நகர்வு முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரமான எதிர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் சிறிலங்கப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.