Publish Date: Tue, 15 Jul 2008 (18:42 IST)
Updated Date: Tue, 15 Jul 2008 (18:42 IST)
சீனாவின் மத்திய பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.2 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகருக்கு அருகே மதியம் 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்க வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 4.9 ரிக்டராக பதிவாகியுள்ளது.
கடந்த மே 12ம் தேதி சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 69,181 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.