சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி அங்கு பணிபுரிந்து வந்த 10 தொழிலாளர்கள் பலியாயினர்.
வடக்கு சீனாவின், ஷான்சி மாகாணத்தில் சாங்ழி என்னுமிடத்தில் உள்ள இந்த நிலக்கரிச் சுரங்கத்தின் கீழ்தளத்தில் 82 சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ள நீர் உள்ளே புகுந்தது.
இதில் அங்கு பணியாற்றிய 72 பேர் உயிருடன் தப்பித்து விட்டனர். வெள்ளத்தில் சிக்கி பலியான 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்து அடிக்கடி நிகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இதுபோன்ற விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 3,800 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.