Publish Date: Mon, 14 Jul 2008 (18:02 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (18:02 IST)
இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்கப் படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிறிலங்கப் படையினரின் இந்த முன்நகர்வு முயற்சியை முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நீண்ட நேரம் நடந்துள்ள இந்தக் கடுமையான மோதலில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 படையினர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.