வடக்கு பிலிப்பைன்சிற்கும் தைவானிற்கும் இடைப்பட்ட தீவுக் கூட்டத்தில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.
பட்டானெஸ் தீவுகளில் உள்ள பாஸ்கோ நகரத்தில் இருந்து 70 மைல் தொலைவில் லூசான் நீரிணைப்பில் கடலுக்கடியில் இந்த நில நடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும், இதற்குப் பிறகு 4.6 ரிக்டர் அளவிற்கு பின்னதிர்வு ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் பற்றிய தகவல் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை. பசுபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில் நில நடுக்கங்கள் சாதாரணமாக ஏற்படுகின்றன.