Publish Date: Sun, 13 Jul 2008 (15:40 IST)
Updated Date: Sun, 13 Jul 2008 (15:40 IST)
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் காவலர்களின் அணி வகுப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 காவல் அதிகாரிகள் 13 பொது மக்கள் ஆகிய 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.
உருஸ்கான் மாகாணத்தில் உள்ள டெக் ரவூத் மாவட்டத்தில் இன்று இத்தாக்குதல் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஜூமா குல் ஹிமாட் தெரிவித்தார்.
இத்தாக்குதல் கொல்லப்பட்டுள்ள பொதுமக்களில் பலர் பலசரக்குக் கடைகளில் கூடியிருந்தவர்கள் என்றும், சம்பவம் நடந்த பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.