வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பு மிகவும் பாராட்டுக்குறியது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்ததை நிறைவேற்றுவதை முன் எடுத்துச் செல்வதில் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆர்வத்தை தாங்கள் பாராட்டுவதாகவும், அணுசக்தி ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வெள்ளை மாளிகை செய்தித்துறை தொடர்பு அதிகாரி டோனி பிராட்டோ கூறியுள்ளார்.
உலக அளவில் அணுஆயுதமற்ற நிலையை உருவாக்கும் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துள்ள இந்த முயற்சி உதவும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.