சிறிலங்காவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பயணிகள் பலியாகினர்.
புட்டாலா நகரத்தின் அருகே தெற்குப் பகுதியில் இன்று அந்த பேருந்து வந்து கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம மனிதர்கள் திடீரென வெளிப்பட்டு பேருந்தை நோக்கி சரமாரியாக சுட்டதாக சிறிலங்கா ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த திடீர்த் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த மேலும் 22 பேர் படுகாயமடைந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்றும் அவர் கூறினார்.