சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியாகினர்.
மத்திய சீனாவில் உள்ள ஜியுவான் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் பணி மாறும்போது, சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து மின்தூக்கி அறுந்து கீழே விழுந்துள்ளது.
உலகில் அதிக அளவில் நிலக்கரி உற்பத்தியாகும் நாடான சீனாவின் சுரங்கங்களில் விபத்து என்பது வாடிக்கையாக உள்ளது. இங்கு கடந்த ஆண்டு மட்டும் சுரங்க விபத்துகளில் 3,800 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.
சுரங்கங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் தவறுவதால்தான் இதுபோன்ற விபத்துக்கள் அதிகரிக்கின்றன என்பதே பரவலான குற்றச்சாற்றாகும்.