சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு அவசரப் பயணமாக இந்தியா வருகிறார் என்று சிறிலங்க அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகர் புது டெல்லிக்கு இன்று இரவு வந்து சேரும் அவர், நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேச்சு நடத்துகிறார்.
சார்க் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக மகிந்த ராஜபக்ச இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்படுவதாக புதினம் இணைய தளம் கூறுகிறது.
அண்மையில் இந்திய உயர்மட்டக் குழுவினர் கொழும்பிற்கு அறிவிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டு ரகசியப் பேச்சுக்களை நடத்தியிருந்த நிலையில், சிறிலங்க அதிபரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.