இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்த வரைவு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று பன்னாட்டு அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "இந்திய அரசின் வேண்டுகோளிற்கு இணங்க, ஐ.ஏ.இ.ஏ. செயலகம் இன்று இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவை ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் தேதி குறித்து முடிவு செய்வதற்காக முகமையின் தலைவர் முனமையின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவை பொதுவில் வெளியிட முடியாது என்றும், இந்த நேரத்தில் முகமை அதிகாரிகள் பேட்டியளிக்க மாட்டார்கள் என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.