ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 4 பேர் இந்தியர்களும் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதுபோன்ற தாக்குதல்களினால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் நவ்தேஜ் சர்னா விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானில் இந்தியத் தூதரக நடவடிக்கைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தற்கொலைத் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளைப் பெற்றுத்தரும் பணிகளையும், மீட்புப் பணிகளைப் பார்வையிடும் பணிகளையும் மேற்கொண்டு வரும் இந்தியத் தூதருடன் அரசு எப்போது தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள சுமார் 3,000 இந்தியர்கள் தாலிபான்களின் தாக்குதல் அச்சத்திற்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.