ரஷ்ய நாட்டின் ஓகோஸ்ட்க்ஸ் கடற் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிற்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நேரப்படி காலை 2.12 மணிக்கு (இந்திய நேரப்படி 7.41) ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பூமத்திய ரேகையில் இருந்து 53.892 வடக்கும், தீர்க்க ரேகை 152.884 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் ஜப்பான் தலைநகல் டோக்கியோவில் இருந்து 2600 கி.மீ. தூரத்தில் உள்ளது.
நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 7 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் சுனாமி என்றழைக்கப்படும் ஆழீப்பேரலைத் தாக்குதல் அபாயம் உள்ளது.
இத்தகவலை இந்திய வானியல் ஆய்வுத் துறையும் கூறியுள்ளது. அத்துறை, நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிக்டர் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.