Publish Date: Fri, 04 Jul 2008 (11:21 IST)
Updated Date: Fri, 04 Jul 2008 (11:21 IST)
இலங்கை மன்னாரில் சிறிலங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 15 படையினர் பலியானதுடன், 30 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னார்- சன்னார் பகுதிக்கும் கொடிகட்டிய ஆற்றுப் பகுதிக்கும் இடையில் நுழைந்த சிறிலங்கப் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் எம்.ஐ.- 24 ரக விமானங்கள், பீரங்கிகள், மோர்ட்டார்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளனர்.
இம்முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். மாலை 6.00 மணி வரை நீடித்த கடும் மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட படையினரின் இரண்டு உடல்களையும், பெருமளவிலான ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் என்று புதினம் இணைய தளம் கூறுகிறது.