உலகிலேயே அதிகளவு எரிவாயு வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள கத்தார், தனது விமானங்களில் எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், உலகிலேயே முதல்முறையாக விமானத்தில் எரிவாயுவைப் பயன்படுத்தும் நாடு என்ற பெருமையை கத்தார் பெறுகிறது.
அடுத்த ஒரு ஆண்டிற்குள் எரிவாயு பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையிலான, முன்னோட்டங்கள் நடந்து வருகின்றன.
இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாறுவதன் மூலம், பெட்ரோல் விலை உயர்வைச் சமாளிக்க முடியும் என்று கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத் தலைவர் அல் பக்கார் தெரிவித்துள்ளார்.
சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேமிப்புக் கிடங்கை கத்தாரில் ராயல் டச் ஷெல் நிறுவனம் அமைத்து வருகிறது. இதன்மூலம் கத்தாரின் எரிவாயுக் கனவுகள் சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.