Publish Date: Thu, 03 Jul 2008 (18:28 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (18:27 IST)
இந்தியாவில் இருந்து இயங்கும் திபெத்திய இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை சீனா வலியுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் பீஜிங்கில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தத் திட்டமிடப்படும் எந்த நடவடிக்கைக்கும் தலாய் லாமா ஆதரவளிக்கக் கூடாது என்று, பீஜிங்கில் தலாய் லாமாவின் சிறப்புப் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்திய சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திபெத்திய இளைஞர் காங்கிரசின் வன்முறைகளையும், சதித் திட்டங்களையும் ஒழித்து, அவர்களின் தீவிர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தலாய் லாமா உடனடியாகக் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது வரும் என்று சீனா எச்சரித்துள்ளது.