Publish Date: Wed, 02 Jul 2008 (20:55 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (20:54 IST)
இலங்கையில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது நேற்று காலை 6.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தியவாறு முன்னேற முயன்றுள்ளனர். படையினரின் முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலின் மூலம் முறியடித்துள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையில் இரவு 10 மணி வரை நீடித்த கடும் மோதலில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.