Publish Date: Wed, 02 Jul 2008 (17:50 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (17:49 IST)
பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதிகளில் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த 18 முக்கியத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைபர் ஏஜென்சி பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பலர் தேடப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் 46 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் பிடிபட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.