அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.-வைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் சிறுநீரக நோயால் அவதியுற்று வருவதாகவும், இன்னும் சில மாதங்களே அவர் உயிருடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நோய்க்கு பின் லேடன் எடுத்துக் கொள்ளும் ஒரு சில மருந்துகளின் பெயர்களையும் சி.ஐ.ஏ. திரட்டியுள்ளதாக தெரிகிறது.
தற்போது அவர் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவுகள் அடிப்படையில் அவர் இன்னமும் 6 முதல் 18 மாதங்களே உயிருடன் இருக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின் லேடன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சையில் இருப்பதாகவும் முதன் முதலில் கூறியவர் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் என்பது குறிப்பிடத்தக்கது.