Publish Date: Wed, 02 Jul 2008 (11:43 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (11:42 IST)
பீஜிங்: சீனாவில் அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியானதாக சீன அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள, அரசுக்கு சொந்தமான ஹியூஸென் லியான்ஷுயிங் சுரங்கத்தில் நேற்று 28 பேர் வேலை செய்தனர். இந்த விபத்து நேர்ந்ததில் 18 பேர் பலியாயினர்.
12 பேர் மீட்கப்பட்டனர், இதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிறகு 16 பேர் அடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் அவர்களும் பலியானதாக தற்போது உறுதி செய்துள்ளது.
Webdunia
Publish Date: Wed, 02 Jul 2008 (11:43 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (11:42 IST)