பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 8 பேர் பலியாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்புகளின் சத்தம் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேட்கப்பட்டுள்ளது.
இக்குண்டுவெடிப்புகளில் வருமான வரித்துறை அலுவலகம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அப்பகுதிகளில் ஏராளமான ஆம்புலன்சுகள் விரைவதாகவும் ஆஜ்தக் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
இக்குண்டு வெடிப்புகளில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.