Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது!

ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது!
, வியாழன், 26 ஜூன் 2008 (16:32 IST)
ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா 145-வது இடம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஊழலில் பாக்கிஸ்தான் 140-வது இடம், இந்தியா 74-வது இடம்.

இந்த ஆய்வை மேற்கொண்ட தனிப்பட்ட சர்வதேசக் கழகமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உலகளாவிய ஊழல் பிரிவுக் குறியீட்டில் 180 நாடுகள் ஊழல் நிலவர கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ரஷ்யா 145-வது இடம்பெற்று ஊழலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வில் 72-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74-வது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் 140வது இடத்திலும், ஈரான், லிபியா, நேபாளம் ஆகிய நாடுகள் ஊழலில் முறையே 133, 134, 135-வது இடங்களை பெற்று ஊழலில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன.

அண்டை நாடான சீனா கடந்த ஆண்டு 72-வது இடத்தில் இருந்தது. இந்த கணக்கெடுப்பில் ஒரு இடம் மலிந்து 73-வது இடத்திற்கு தாழ்ந்துள்ளது.

இலங்கை 96-வது இடத்திலும், மாலத்தீவுகள் 90-வது இடத்திலும் உள்ளது. ஆசியப் பகுதியில் ஊழல் குறைவாக உள்ள நாடு சமீபத்தில் ஜனநாயக மயமான பூட்டான். இது 41வது இடத்தில் உள்ளது.

ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், ஃபின்லாந்து, நியூஸீலாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

ஊழலில் அனைத்து நாடுகளையும் விஞ்சும் விதமாக மியான்மார், சோமாலியா இந்த பட்டியலில் மிகவும் கீழே உள்ளது.

அமெரிக்கா தனது 20வது இடத்தை தக்கவைத்துள்ளது. அமெரிக்காவிற்கு மேல் ஜெர்மனி, அயர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், உள்ளது. 13-வது இடத்தில் பிரிட்டனும், 14-வது இடத்தில் ஹாங்காங்கும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil