Publish Date: Mon, 23 Jun 2008 (20:14 IST)
Updated Date: Mon, 23 Jun 2008 (20:13 IST)
ஈராக் தலைநகர் பாக்தாதின் வடக்குப் பகுதியில் இன்று நடந்த மோர்ட்டார் தாக்குதலில் சன்னி முஸ்லிம்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாதில் இருந்து 112 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதய்ம் நகரத்தில் அமெரிக்கப் படையினருடன் சேர்ந்தியங்கும் சன்னி இன முஸ்லிம்கள் தங்கியிருக்கும் கூடாரத்தின் மீது மோர்ட்டார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 10 மோர்ட்டார் குண்டுகள் அடுத்தடுத்து கூடாரத்தின் மீது விழுந்ததாகவும், இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் ஈராக் ராணுவத்தின் பட்டாலியன் கமாண்டர் மேஜர் மொகமது தவாரா தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்கள் அல்- காய்டா பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.