இந்திய மாணவர்கள் உலகில் சிறந்த மாணவர்கள் என்று புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
இந்திய மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கிறிஸ் பேட்டென் கூறினார்.
"இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் எங்கள் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் உலகில் சிறந்த மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்" என்றார் அவர்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது 257 மாணவர்கள் படிக்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அங்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.